ஒரே நாளில் 2 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

0

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தனை – ஒகஸ்டா தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு வகை மொடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதனால் அவர் சுகவீனமுற்ற நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இந்தப் பெண்ணின் கணவர் பேராதனை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் கங்கவட்ட கோரள சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்தில் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த தடுப்பூசி செலுத்த பணிகளில் ஒரே தாதியினால் தனது மனைவிக்கு இந்த இரண்டு தடுப்பூசிகள் செல்லப்பட்டதாகவும் பின்னர் தனது மனைவி திடீர் சுகவீனமுற்றதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் தனக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply