போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சேதுவை பகுதிகளில் இரு நபர்களிடம் கையூட்டல் பெற முயற்சித்த இராணுவ சிப்பாய்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சிலாபம்- மையகுளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம் கப்பம் கோரிய இரு இராணுவ சிப்பாய்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 15,000 ரூபா கையூடலை பெற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்..
அதே நேரம் சீதுவை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒருவரிடம் இருந்து கையூடலை உடலைப் பெற முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நபர் சுமார் 80,000 ரூபாவை கையூடகலாக பெற முனைந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவினர் சுட்டிக் காட்டியிருந்தனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள் மூவரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



