கொழும்பில் இன்று அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி ஜனாதிபதி செயலகம் வரை சென்றடையவுள்ளது.
அத்துடன் அதிபர்கள் ஆசிரியர்கள் இன் வேதன முரண்பாடு, கொத்தலாவல பாதுகாப்பு சட்ட மூலம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக 11 நாட்களாக இணையவழி கற்பித்தல் புறக்கணித்து வருகின்றமை செயற்பாட்டினை குறிப்பிடத்தக்கது .



