கடன் தொல்லையா? கவலையே வேண்டாம்—இதோ, கடன் தீர வழிபாட்டு முறைகள்..!

0

● வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு மாவுப் பொடியால் அபிஷேகம் செய்தால் செல்வவளம் பெருகும். கடன் தொல்லைகள் அகலும்.

● அஸ்வினி, அனுஷம் நட்சத்திர நாளில் கடனில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுத்தால், கட்டாயம் அந்தக் கடன் விரைவில் தீரும்.

● பவுர்ணமி பிரதோச காலத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் கடன் தொல்லை தீரும். ருண விமோசன லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்திரம் பாடினாலும் அல்லது படித்தாலும் கடன் தீரும்.

● செவ்வாய்க்கிழமை வரும் செவ்வாய் ஹோரையில் சிறிய அளவு பணத்தை கடனை அடைக்க கொடுத்தாலும் விரைவில் கடன் தீரும்.

● ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதி, சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதி, மற்றும் குளிகன் நேரத்தில் அடைக்கப்படும் கடனால் மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது என்கிறது ஜோதிட சாஸ்திரம்

● சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட கடன் தீரும்.

● குபேர பூஜை, சொர்ணாகர்ஷண பைரவர் பூஜைகள் செய்ய கடன் தொல்லை நீங்கும்

● இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகினி நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு செய்து வழிபட கடன் பிரச்சினை தீரும்.

● விழுப்புரம் அருகே சிங்கிரி கோவில், பூவரசன்குப்பம், பரிக்கல் ஒரே நேர்க்கோட்டில் அமைந்த இம்மூன்று நரசிம்மர்களை, ஒரே நாளில் தரிசித்தால் தீராத பணக்கஷ்டமும் கடனும் தீரும்.

● கொடுத்த கடன் திரும்பி வர அருகில் உள்ள பைரவர் சன்னதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடலாம்.

● திருமோகூர் சக்கரத்தாழ்வார் 21 செவ்வாய்க்கிழமை நெய் தீபமேற்றி வழிபட கொடுத்த கடன் திரும்பி வரும்.

● கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ருண விமோசன லிங்கேஸ்வரர் 11 திங்கட்கிழமை அர்ச்சனை செய்வது கடன் நிவர்த்தி பரிகாரமாக கூறப்படுகிறது. இந்தத் திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலம் ஆகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply