பெண்களே.. உங்கள் வீட்டு பூஜை அறையில் கடைப்பிடிக்க வேண்டிய 12 விடயங்கள்..!

0

1. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப்பார்த்துவைத்தால் சாபமுண்டாகும்.

2. நமது பூஜை அறையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்கும்.

3. வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது.
தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவரின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

4. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

5. நமது வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறு வணங்குதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் வணங்க வேண்டும்.

6. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

7. மறைந்த மூதாதையரின் படத்தை வீட்டின் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் சேர்க்காமல் தனியாக வைக்க வேண்டும்.

8. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ, ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

9. தெய்வ படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

10. பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்தல் தவறாகும்.

11. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுது அந்த இடத்தில் இருக்கவும் கூடாது.

12. “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவர்களுக்கு எப்பேர்பட்ட எதிர்மறை வினையும், வியாதியும் நெருங்காது- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply