திருச்செந்தூரில் வல்லமை கொண்ட ‘பன்னீர் இலை விபூதி பிரசாதம்’ பற்றி, தெரியுமா உங்களுக்கு?

0

▪ பன்னீர் இலை விபூதி பிரசாதம்:
திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. இந்த பன்னீர் இலை விபூதி
பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து, பன்னீர்
இலைகளில் விபூதியை வைத்து மடித்து பக்தர்களுக்கு கொடுப்பதே இலை விபூதியாகும்.

▪ பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக
அமைந்துள்ளன. வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

▪ விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட
குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.

▪ ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை
உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும்
பாமாலையை இயற்றினார்.

▪ 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.

▪ நாமும் சரவண பவாய நமஹ என்று ஓதி இலை விபூதியைத் தரித்து அந்த சேவற்கொடியோன் பாதம் பணிவோம்.- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply