கோவிலில் நடை சாற்றப்பட்ட பின் பிரகாரம் வலம் வரலாமா? தெரிந்து கொள்ளலாமா?

0

☆ பொதுவாக கோயில் நடை சாற்றப்பட்ட பிறகு பிரகார வலம் வரக்கூடாது. பொதுவாக பெரிய கோயில்களில் ஆகமங்களை பின்பற்றித்தான் கோயில் நடை சாத்தப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சில பண்டிதர்கள், இறைவன் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகக் கூட சித்தரித்து சொல்வர்.

☆ இறைவனுக்கு ஓய்வு உண்டா? என்று நினைக்கலாம். பக்தர்கள், இறைவனை தன் குடும்பத்தில் ஒருவர் போலவே பார்க்கின்றனர். அதனால்தான் ஊஞ்சல் உற்சவம் நடத்துகின்றனர். துலாபாரம் இடுகின்றனர். திருக்கல்யாண உற்சவம் கூட நடத்துகின்றனர்.

☆ குழந்தையும் தெய்வமும் ஒன்று, என்று குழந்தையை தெய்வம் இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டாடுகின்றனர். நாம் எவ்வாறு குழந்தை உறங்கும் சமயத்தில் அதனை தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறுகிறோமோ, அது போல நடை சாத்திய பிறகு இறைவனை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது.

☆ அந்த வகையில் பிரகாரத்தை வலம் வருவது, தேவையில்லாமல் நம்முடன் வந்த குழந்தைகளை கோவில் மணியை அடிக்க அனுமதிப்பது போன்றவற்றை எல்லாம் தவிர்த்து விடுவது நல்லது.- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply