ராகு, கேதுவுக்கு எந்த கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்க வேண்டும் தெரியுமா..?

0

சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து விரதத்தை ஆரம்பித்து காளி கோவிலுக்குச் சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி மந்தார மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாகப் படைப்பது பலன் அளிக்கும். ராகுவிற்கும் மந்தார மலர்களைப் படைப்பது நல்லது. கருப்பு நிற ஆடைகளை ஏழை-எளியவர்களுக்கு தானம் அளிப்பது ராகு தோஷத்தைப் போக்கும்.

கேது விரதம்

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விரதத்தை தொடங்கி விநாயகரை வணங்குவது நல்லது. விநாயகருக்கு செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். கேதுவை அவருக்குரிய மந்திரங்கள் சொல்ல வழிபட்டு வைடூரியத்தை மோதிரமாக அணிந்து வழிபடுவது மிகவும் நல்லது. கேது தோஷத்தை நீக்கக்கூடியது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply