அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்க விநாயகருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

சங்கடஹர சதுர்த்தியில், கணபதி வழிபாட்டைச் செய்யுங்கள். அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகனை வழிபடுங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் விநாயகப் பெருமான்!

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.

இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.

மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மை பயக்கும். நலம் அனைத்தும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் காரியம் அனைத்தையும்
வெற்றியாக்கித் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply