
அழகர்கோவில் மலையில் உள்ள பழமுதிர்சோலையில் திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், வேண்டியும் பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
திருமண தடை நீக்கும் பழமுதிர்சோலை முருகன்
மதுரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகர்கோவில் மலையில் உள்ளது பழமுதிர்சோலை. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மூலவராக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்ளார். முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது.

திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், கல்வி வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகின்றனர். பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில் தான் நாவல் மரங்களில் பழங்கள் பழுக்கும். ஆனால் இங்குள்ள நாவல் மரத்தில் ஐப்பசி மாதத்தில் பழங்கள் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
