
பெண்களுக்கு கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள், கரு கலைந்து போதல், குறைப்பிரசவ குறைபாடுகள் போன்வற்றை நீக்கி சுகப் பிரசவம் நடைபெற அருள் புரிகிறாள் பகமாலினி.
பெண்களை தீய சக்திகள் அண்ட விடா மல் காப்பதும், இவளது பொறுப்பாகிறது. திருமணத் தடைகள் விலக வேண்டி, கன்னிப் பெண்கள், பகமாலினியை வணங்கினால், விரைவிலேயே மனதிற்கு பிடித்த மணாளன் கிடைப்பான்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து இந்த மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
நீங்கள் த்விதியை திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி பகமாலினியை, சுக்லபக்ஷ் த்விதியை கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி அன்று வணங்குங்கள்.
த்விதியை திதியன்று, வீட்டில் விளக்கேற்றி, பகமாலினியை தியானித்து, சிவப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு, அவளுக்குரிய மந்திரத்தைச் சொல்லுங்கள்.

பகமாலினி:
செய்யும் காரியங்களில் தொடர்ந்து தடைகள் இருந்தால், திதி நித்யா தேவியை வணங்குங்கள். வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். மேலும், தடையில்லா செல்வம் கிடைக்கும். திதி நித்யா தேவிகளின், இரண்டாம் இடத்தை அலங்கரிப்பவள். ஆறு திருக்கரங்களுடன், மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண்ணை உடையவள். பக என்னும் சப்தம் இவளது மந்திரத்திலும், இவளது பரிகார தேவதைகளின் மந்திரங்களிலும் அடிக்கடி வருவதால், இவள் பகமாலினி என்றானாள்.
அது மட்டு மல்ல, வடமொழியில் பகம் என்றால் அழகு, தர்மம், செல்வம், வீரம், வைராக்யம், முக்தி என்ற பொருளும் உண்டு. இவை அனைத்தும் கொண்டவளுக்கு, பகவதி என்ற பெயரும் உண்டு. பகமாலினி சிவந்த நிறமுடையவள். இவளது திருக்கரங்களில், செங்கழுநீர் புஷ்பங்கள், கரும்பு வில், தாமரை, பாசம், அங்குசம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
மூலமந்திரம்:
ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்…- Source: newstm
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
