
மேஷ ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும்.
மேஷம்

பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாகச் செயல் படுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்தி, கலகம் விளைவித்த நபர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள்.
தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்; வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை இனி ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். போட்டியாளர்களே திகைக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள்.
உத்தியோகத்தில், அலட்சியப்படுத்திய மேலதிகாரி, உங்களுக்கு இணக்கமாக இருந்து, ஆதரவு தருவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை, உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்தப் பணிகளையும் செய்யவிடாமல், தடுமாற்றத்தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேதுபகவான், இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்கிறார். சமயோசித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். வாழ்க்கைத்துணையின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பணப்பற்றாக் குறை நீங்கும்.
ராகு பகவான் கோயில்
உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு மிக நன்றாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒரு தீர்வு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல தீர்வை தருவதாகவும், உங் களைச் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கலும் செவ்வரளி மாலையும் சமர்ப்பித்து வழிபடுங்கள்; சகலமும் நன்மையாகவே அமையும்.
ரிஷப ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள் ரிஷபம்
ராசிக்கு 3-ல் இருந்தபடி புதிய திருப்பங்களுடன், பணவரவு, பிரபலங்களின் நட்பு என்று பலன்களைத் தந்த ராகு, தற்போது 2-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். ஆகவே, தடைப்பட்டு வந்த பல காரியங்கள் அனுகூலமாக முடியும். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மகனுக்கு உயர்கல்வியைத் தொடர்வதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.
வியாபாரத்தில் பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். முன்பு போல் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புதுப் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களுக்குத் தொல்லை தந்த மேலதிகாரி, இனி உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வார். அவரால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்களது பொறுப்பு உணர்ச்சியைக் கண்டு, சலுகைகளுடன் பதவி உயர்வும் தருவார்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை ராசிக்கு 9-ல் இருந்த கேது, தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பைத் தந்த துடன், அவருடன் தேவையற்ற மனஸ்தாபங் களையும் ஏற்படுத்தினார். தற்போது கேது 8-ல் இருப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதிக்குக் குறைவிருக்காது. குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, அலைச்சலையும் வீண் அச்சத்தையும் ஏற்படுத்துவது போல் இருந்தாலும், அதீத ஆதாயத்தையும் செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.
தினமும் விநாயகப்பெருமானை தவறாமல் வழிபடுங்கள். அருகிலுள்ள ஆலயம் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; வாழ்க்கைச் செழிக்கும்.
மிதுன ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்
ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அவரின் கல்யாணத்தை உறவினர்கள், நண்பர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள். பண வரவு அதிகரிக்கும் என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்கிறார்கள் என நம்பி, எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அதேபோல், பெரிய முதலீடுகளையும் தவிர்க்கவும். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில், உங்களின் திறமையை அனைவரும் உணர்வார்கள். தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் இனி தாமதமின்றி கிடைக்கும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்துகொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைக் குறை கூறியவர்கள் இனி புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும்.
வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயரும்.
மொத்தத்தில் இந்த ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதார்த்தமான முடிவுகளால் முன்னேற வைப்ப தாக அமையும்.
உங்களுக்குப் பெருமாள் வழிபாடு துணை சேர்க்கும். எதிர்காலம் சிறக்க, திருவோண விரதம் இருந்து பலன் பெறுங்கள்.
கடகராசி

ராகு பகவான் அருளும் பலன்கள் கடகம்
ராகு, இப்போது உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்கிறார். நிம்மதி பிறக்கும். முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியம் கூடும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். இனி நிம்மதியாக உறக்கம் வரும். குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் விலகி, சந்தோஷம் குடிகொள்ளும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உடன்பிறந்தோர் இனி ஒத்தாசை யாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்ய பணம் வரும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வகையால் அதிக லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்போது கிடைக்கும். சக ஊழியர்கள் இனி நட்புக்கரம் நீட்டுவார்கள்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கை யாளர்களின் தேவைகளை உணர்ந்து பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள்.
உத்தியோகத்தில், உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காகப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி, உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்திச் செல்வதாக அமையும்.
உங்களுக்கு சிவ தரிசனமும் பிரதோஷ வழிபாடும் பலம் சேர்க்கும். பிரதோஷ தினத்தில் காப்பரிசி சமர்ப்பித்து, நந்தியெம்பெருமானை வழிபடுங்கள்; வாழ்க்கை வளமாகும்.
சிம்ம ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்சிம்மம்
இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் இருந்த ராகு, இப்போது ராசிக்கு லாப வீட்டுக்கு வருகிறார். புத்துணர்ச்சியும் புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் இருக்கும். உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். வாரிசு இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். குலதெய்வப் பிராத்தனையை நிறைவேற்றுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்குகள் விலகும். வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.
ராகு கேது கோயில்
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார்.பிள்ளைகளால் உங்கள் புகழ் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். தொழில்ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சில குழப்பங்களை அளித்தாலும், திடீர் யோகத்தை அளிப்பதாகவும் அமையும்.
அனுதினமும் துர்கைக்கு விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். துன்பங்களும் தடைகளும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
கன்னி ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்கன்னி
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் இருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடை வீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். பணவரவு உண்டு. சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். குடும்ப வருமானம் உயரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு.
வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பற்று-வரவை உயர்த்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை அழகுபடுத்துவீர்கள். புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் பழியும் வரக்கூடும்.
சிலருக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கலாம். புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சிலருக்கு, மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த கேது. இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார். பதற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டு, பதவி உயர்வுகளும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களுக்கு வேலைச்சுமையை தந்தாலும், விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கி வழிபடுங்கள்; அன்னதானம் செய்யுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் ராசி

ராகு அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 10 – ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். சுப காரியங்களால் வீடு களைகட்டும்.
நீங்கள் கேட்டவை
கெளதம் மேனன் முதல் ஹரி வரை… லவ் ஸ்பெஷல் வசனங்கள்!
குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய வழி காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும்.
வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத உதவியால் தொழில் லாபம் பெருகும். ஏற்றுமதி இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, மருந்துப் பொருள்களால் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். வேலைச்சுமை குறையும். சிலருக்கு தகுதி, திறமைக்கேற்ற உத்தியோகம் புகழ் பெற்ற நிறுவனத்திலிருந்து கிடைக்கும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 4 – ல் இருந்த கேது, இப்போது மூன்றாவது வீட்டில் வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும்; சங்கடங்கள் தீரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சிலர் சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் நட்பு வலுப்படும்.
மொத்தத்தில் இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, மனத்தாங்கலுடன் திகழ்ந்த உங்களை மகிழவைப்பதாக அமையும்.
அனுமன் வழிபாடு உங்களுக்கு உற்றத்துணையாகும். அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள் வெற்றி உண்டாகும்.
விருச்சிக ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்
உங்கள் ராசிக்கு 9 – ல் இருந்த ராகு பகவான், இப்போது 8- ல் சென்று மறைகிறார். இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளை பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். தந்தையுடன் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலை நீங்கும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும். வசதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வீட்டை விட்டு, வேறு வீட்டுக்கு மாறுவீர்கள்.
வியாபாரத்தில், எதையும் யோசித்து முடிவெடுக்கவேண்டும். இருப்பதை வைத்து லாபத்தைப் பெருக்கவும். கமிஷன், ஷேர் மார்க்கெட் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கை யாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம்.
உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே உங்களை நம்பி இனி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வீண் குழப்பங்களுக்கு ஆட்படாமல் செம்மையாகச் செயல்படுவீர்கள்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 3 – ல் இருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2 – ல் நுழைகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வெளியிடங்களில் முடிந்தவரை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். மகள் அல்லது மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பல சாதனைகளைச் செய்வீர்கள். சிலருக்கு அயல்நாட்டுப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரி அனுசரணையாக இருப்பார்.
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, சிலநேரம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், ஓரளவு பணவரவையும், மகிழ்ச்சி யையும் தருவதாக அமையும்.
முருக வழிபாடு உங்களுக்குத் துணை நிற்கும். விசாகத்தன்று நெய்தீபம் ஏற்றி வைத்து வேலவனை வழிபட்டால், வெற்றிகள் கைகூடும்.
தனுசு ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் தெளிவு பெறுவீர்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். உற்சாகத்துடன் வலம்வருவீர்கள்.
குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் வாழ்க்கைத்துணையுடன் சின்னச் சின்ன விவாதங்கள் இருக்கத்தான் செய்யும். சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள்.
பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். அவரால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பதவி-சம்பள உயர்வுகளும் உண்டு.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த கேது, இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமர்கிறார். சூழலுக்கு ஏற்ப பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருந்ததே, இனி அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி, அவர்களின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள்.
பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து போகும். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை மற்றும் படிப்பு விஷயத்துக்காக அதிகம் போராட வேண்டியது வரும். உடல் நலத்தில் கவனம்
வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி புது அனுபவங்களையும் அதன் மூலம் முன்னேற் றத்தையும் தருவதாக அமையும்.
ராம நாம பாராயணமும் ஸ்ரீராம வழிபாடும் நன்மைகளை அளிக்கும்.
மகர ராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்து அமர்கிறார். இனி எல்லாவற்றிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்றுசேர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
மனைவி பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்கள், உங்கள் பேச்சுக்கு மதிப்புக் கொடுப் பார்கள். திருமணம் கூடி வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
வியாபாரத்தில், பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். புது அணுகுமுறையால், விளம்பர யுக்தியால் லாபத்தைப் பெருக்குவீர்கள். மருந்து வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களின் யோசனைகளும், திட்டமிடலும் பாராட்டு பெறும். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்களின் ராசியிலேயே இருந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். பேச்சில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சாந்தமாகப் பேசும் அளவுக்குப் பக்குவப்படுவீர்கள். இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
ராகு கேது
வியாபாரத்தில், பற்றுவரவு உயரும். வேலையாள்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கித் தருவதாக அமையும்.
மாலவனை மனதால் பிரார்த்தித்துத் தொழ, வாழ்க்கை மலரும். சனிக் கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி அணிவித்து வழிபட்டு வாருங்கள்; வெற்றிகள் குவியும்.
கும்பராசி

ராகு பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகுபகவான். இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன் – மனைவிக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். 5 -ம் வீட்டில் ராகு அமர்வதால், சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன், முன்கோபம் குறையும்.
குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில், அனுபவ அறிவால் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். ஹோட்டல், இரும்பு, கமிஷன், எண்ணெய் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களுக்கு உதவியாகச் செயல்படுவார். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள்.எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மூத்த சகோதரர் உதவுவார். வங்கியில் லோன் போட்டு வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள்.
பேச்சில் தெளிவு பிறக்கும். வெகுநாள்களாகப் போக நினைத்த வெளிமாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக் கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி காலத்தில், ராகுவால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டாலும், கேதுவால் உங்கள் வாழ்வில் நிம்மதியும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களைப் போக்கும். வெள்ளி-செவ்வாய்க்கிழமைகளில் அம்மனை வழிபடுவதால் சுபிட்சங்கள் பெருகும்.
மீன ராசி

சிவ வழிபாடுராகு பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த ராகுபகவான், இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் வந்து அமர்வதால், மன நிம்மதியைத் தருவார். தடைப்பட்ட வேலைகளை இனி பக்குவமாய்ப் பேசி முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கசப்பு உணர்வு நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்; அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள். உடன்பிறந்த சகோதரர்களும் சகோதரிகளும் பாசமாக நடந்துகொள்வார்கள்.
ராகு கேது
வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசிப் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகத்தில், மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. தடைகள் நீங்கும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 11-ல் இருந்த கேது பகவான், இப்போது பத்தாவது வீட்டில் அமர்கிறார்.எந்த வேலையையும் திறம்படச் செய்து முடிக்கும் மனோபலத்தைத் தருவார். பிரச்னை களின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
வியாபாரத்தில், அவசர முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள்.
உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்; பொறுமையுடன் இருந்தால் பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்வை போராடிப் பெறுவீர்கள்.
மொத்தத்தில், இந்த ராகு – கேதுப் பெயர்ச்சி, உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
சிவ வழிபாடு, உங்களின் வாழ்க்கையைச் சிறக்கவைக்கும். கோயிலில் அன்னதானம் வழங்குங்கள்; வளம் பெருகும்.- Source: vikatan
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
