பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்.. பாய்களில் இருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள்..!

0


பெரும்பாலான வீடுகளில் நாம் தரையில் விரிப்பதற்கு நெகிழிப் பாய்(பிளாஸ்டிக்)கலேயே பயன்படுத்துகிறோம். இப்போது ஆதிக்கம் செலுத்திவரும் நெகிழிப் பாய்களை, குளிர் காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றை பயன்படுத்துவதால் எவ்வித மருத்துவக் குணங்களும் இல்லை.வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதித்து பல்வேறு தீமைகளை நமது உடலுக்கு இழைக்கின்றன.

தாவரங்களில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித மருத்துவ குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும்.


பாய்களில் இருக்கு பலவிதம் :

தண்ணீர் உள்ள இடங்களில் தழைத்து வளர்ந்து அனைத்திற்கும் வளைந்து கொடுத்து முறியாமல் நீண்ட நாட்கள் உறுதியுடன் இருக்கும் தாவரங்களை கண்ட நம் முன்னோர்கள் அதன் மருத்துவ குணங்களையும் ஆராய்ந்துதான் பலவகையான படுக்கைகளை உருவாக்கினார்கள்.


கோரைப் பாய், பிரம்பு பாய், ஈச்சம் பாய், முங்கில் பாய், தாழம் பாய், பேரிச்சம் பாய், நாணல் கோரை பாய் என பலவகைகள் உள்ளன.

இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவை பின் வருமாறு..


மூட்டு, முதுகு, தசை சம்பந்தமான பிரச்னைகள் குறைகின்றன.உடலின் ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்கு நல்ல உற்சாகத்தைத் தரக்கூடியது.

இவ்வகை பணிகளில் கர்ப்பிணிகள் படுத்து உறங்குவதால் அவர்களது இடுப்பு எலும்பு விரிவடையும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.


ஆண்களுக்கு மார்புத்தசை தளர்ந்து விரிவடையும். இதனால் நல்ல தேக ஆரோக்கியத்தைப் பெறலாம்.

ஒவ்வொரு வகை பாய்களுக்கும் இருக்கிறது ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் :


கோரைப்பாய்: கோரைப்பாயில் தூங்கினால் உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும்.

கம்பளி விரிப்பு: கம்பளி விரிப்பை பயன்படுத்தினால் கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.


பிரப்பம்பாய்: பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும்.

ஈச்சம்பாய்: ஈச்சம்பாயில் படுத்து தூங்கினால் வாதநோய் குணமாகும்.ஆனால் உடலில் சூட்டை ஏற்படுத்தி, கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.


மூங்கில்பாய்: மூங்கில்பாய் என்பது மூங்கில் கழிகளை மெல்லிய குச்சிகளாக உருவாக்கி அதன் மூலம் தடுக்கை போன்ற பாயை தயார் செய்வது ஆகும். இதில் படுத்தால், உடல் சூடும் பித்தமும் அதிகாரிக்கும். அதனால் பெரும்பாலும் மறைப்பாக தொங்கவிடும் இடத்திற்கு இதை பயன்படுத்துவார்கள்.

தாழம்பாய்: தாழம்பாயில் படுத்துறங்கினால் வாந்தி, தலை சுற்றல், அனைத்து வகை பித்தமும் படிப்படியாக போகும்.


பனையோலை பாய்: பனையோலை பாயில் படுப்பது, பித்தத்தை போக்கி உடல் சூட்டை நீக்கி சுகத்தை தரும்.

தென்னம் ஓலையால் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின் சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும்.


ரத்தினக் கம்பளமானது, ஆபத்தான கிருமிகளால் எற்படும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

மலர்களால் உருவாக்கப்படும் படுக்கை பெரும்பாலும் மன்னர்கள் பயன்படுத்துவது ஆகும். இதில் தூங்குவதால் ஆண்மை அதிகரிக்கும், நன்றாக பசியெடுக்கும். இதனால்தான் இன்றைக்கும் முதலிரவில் படுக்கையின் மீது மலர்களை தூவி படுக்கை உருவாக்குவார்கள்.


எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படுக்கை உண்டு. அது அரசர்கள், செல்வந்தர்கள் படுத்துறங்கும் படுக்கையாகும். இலவம் மரத்தில் பஞ்சுகளை மெத்தைகளாக உருவாக்கி அதை மரகட்டிலில் போட்டு தூங்கினால் உடலில் ரத்தம், தாது பலம் பெறும். உடலில் தோன்றும் அனைத்து நோய்களும் நீங்குமாம்.


பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசையே கிடையாது, பாயில் படுத்து உறங்குவது என்பது கிட்டத்தட்ட யோகாசனம் செய்தது போன்ற நன்மையைத் தரக்கூடியது. தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது. இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. இதனால் நம் உடலின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஞாபக சக்தியைப் பெருக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்ட நாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.


மிகவும் பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்..!

Leave a Reply