ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பயிற்சியை அவசியம் செய்யுங்கள்!

0


அடிக்கடி நாம் சொல்லும் சில வார்த்தைகளில் ஒன்று ‘மறந்து போச்சு’ என்பதுதான். உடலுக்கு பயிற்சி போல் மூளைக்கும் விடாது பயிற்சி கொடுத்துக் கொண்டே இருந்தால்தான் மூளையும் சுறுசுறுப்பாய் இருக்கும். பொதுவில் வயது கூடும் பொழுது மறதி ஏற்படும்.


பல வருடங்களுக்கு முன்னால் நடந்தது. நன்கு ஞாபகத்தில் இருக்கும். சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது ஞாபகத்தில் இருக்காது. ஞாபக சக்தியினை கூட்டுவதற்கு பயிற்சியும் மிகமிக அவசியம். அன்றாட வேலைகள் ஞாபகம் இருப்பதற்கு காரணம் பல வருடங்களாக அதனை தொடர்ந்து செய்வதே. மூளை மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த வயதிலும் நீங்கள் ஞாபக சக்தியினை கூட்ட புதிய முயற்சிகள் செய்யலாம்.


முறையான 8 செகன்ட் கவனம் ஒரு செய்தியினை நன்கு ஞாபகத்தில் வைக்கும். ஆனால் இன்று நாம் காண்பதோ பரபரப்பான உலகம். ஒரு கையில் போன் (இல்லை கழுத்தில் போன்) ஒரு கையில் ஏதோ ஒரு வேலை, கண் மற்றொன்றினை கவனிக்கும், கால் ஒரு இடம் நோக்கி நடக்கும். இப்படி செய்வதும் இளமையில் மூளையால் ஈடு கொடுக்க முடியும்.


அதிக வேலைச் சுமை கூடும் பொழுது செய்திகள் பதிவது பாதிக்கப்படும். அடிக்கடி செல்போனை எங்கு வைத்தேன், சாவியினை எங்கு வைத்தேன் என்று தேடுவது இக்காரணத்தினால் தான்.

மூளைக்கு சவால் விடும் விளையாட்டுகளை தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்யுங்கள். ஒரு போன் நம்பரை நினைவு வைக்க (உ.ம்) 55 55 55 2793 எனின் அதனை 555 555 2793 என்ற முறையில் நினைவில் வையுங்கள்.


* எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே படமாக மனதில் பதிய வையுங்கள்.
* அன்றாட வேலைகள் முறையாய் நேரப்படி செய்யுங்கள்.
* முக்கியமானவைகளை முதலில் செய்யுங்கள்.
* உங்கள் ஐம்புலன்களும் முறையாய் செயல்படுவது உங்கள் ஞாபகத்திறனைக் கூட்டும்.
* கண்டிப்பாய் 20 நிமிடங்கள் தியானம் பழகுங்கள். உங்கள் மனஉளைச்சல் காணாமல் போய் விடும்.
* அன்றாட வேலைகளை காலையில் எழுதுங்கள். முடிந்த செயல்களை ‘டிக்’ செய்யுங்கள்.


* நீங்களே சில நிமிடங்கள் உங்களுடன் பேசிக் கொள்ளுங்கள். இதனைத் தனிமையில் செய்யுங்கள். இல்லையென்றால் உங்களை மற்றவர்கள் தப்பாக நினைத்து விடுவார்கள்.

* மதுவானது மூளை, உடல் நலம் இரண்டினையும் கெடுக்கும். எனவே மது கூடவே கூடாது.
* 7-9 மணி நேரம் தூங்குங்கள்.
* உடற்பயிற்சி செய்யுங்கள்.

கால்ஷியம், வைட்டமின் சி, புரதம் இவற்றின் அவசியத்தினை அநேகரும் நன்கு உணர்ந்தே இருக்கின்றோம். ஆனால் சில அவசிய வைட்டமின்கள், தாது உப்புகளின் முக்கியத்துவம் பற்றி நாம் இன்னமும் சரியாக அறியாமலேயே இருக்கின்றோம்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply