தடைகளை நீக்கும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி விரதம்..!

0

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி துரிதமாக பலன்களை தருவார் என்று மாண்டுக்ய உபநிசத் கூறுகிறது. ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும். இவருடைய பெருமையை அதர்வண வேதமும் உட்டாமரேச தந்திரமும், பேத்கார தந்திரமும் பல ரிக்குகளில் விவரிக்கின்றன.

மனிதர்களோ, தெய்வங்களோ எந்த காரியத்தை தொடங்க ஆரம்பிப்பதற்கு முன், முதலில் விநாயகரை வணங்கித்தான் தங்கள் செயல்களை செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால் காரியங்களில் தடை உண்டாகும் என்பது நம்பிக்கை.

விநாயகர் பூஜை செய்வதினால் தூய்மையான உள்ளம், தர்மம் மற்றும் நேர்வழி சிந்தனை, லட்சுமி கடாட்சம், தெளிந்த நல் அறிவு, சமயோஜித புத்தி, வாக்குசாதுரியம், நுண்ணறிவு, பெருந்தன்மை, தைரியம், நற்புகழ் முகப்பொலிவு கிடைக்கும்.

விநாயகரை விரதம் இருந்து உள்ளன்போடு பூஜிப்பவர்களுக்கு இவரே குருவாக விளங்குகிறார். அவர்கள் மந்திர உபதேசம் பெறுவதற்காக எவரையும் தேடி செல்ல வேண்டியதில்லை. விநாயகர் சந்நிதியில் அமர்ந்து கொண்டு எந்த மந்திரத்தை சொன்னாலும் பலிதமாகும். மாத்ருகா அட்சரங்கள் 51. ஒரு அட்சரத்துக்கு கனபதிகள் உண்டு. சுப காரியங்கள் ஆரம்பிக்கும் போது பதினாறு கணபதியின் பெயர்களை சொல்ல வேண்டும்.

என்ன! அன்பர்களே பிள்ளையாரின் மகிமையைப் படித்தீர்கள் அல்லவா! இனி நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் தினமும் வீட்டில் விநாயகரை விரதம் இருந்து பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

அப்புறம் பாருங்க….

கல்யாணத் தடையா, குழந்தை இல்லையா? வேலை கிடைக்க வில்லையா?, வீடுகட்ட முடியவில்லையா, கடனை தீர்க்க முடியவில்லையா, எல்லாபிரச்சினைகளும் தீர்ந்துவிடும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply