இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்..!

0

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

ஐந்து நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான இன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

இன்று காலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானுக்கு பூ போட்டு சஷ்டி கவசம் பாடி விரதத்தை தொடங்க வேண்டும். இன்று முழுவதும் மௌன விரதம் இருந்து உணவு அருந்தாமல் மாலையில் முருகன் கோவிலில் நடக்கும் சூரசம்ஹாரத்தை கண்டு வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் வேண்டுதல்களை முருகப்பெருமான் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் அசைக்க கூடியாத நம்பிக்கை- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply