உறவுகள் எல்லாம் ஒட்டிக்கொள் இந்த ஒரு வார்த்தை போதுமாம்..!

0

நாம்’ என்று கூறும் போது அது அடுத்தவர்களிடம் ஏற்படும் தாக்கத்தையும், அதனால் ஏற்படும் மானுட மகத்துவத்தையும் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளினால் நிரூபித்து வருகின்றனர்.

நான் என்று சொன்னால் உதடுகள் இணையாது, நாம் என்று சொன்னால் உதடுகள் இணையும் என்று கூறுவது காலம் காலமாக அரைத்த மாவு தான். இருந்தாலும் இந்த மாவை வைத்து தான் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான மேக்கன் ராபின்ஸ் தோசை சுடும் விதமாக, இந்த வார்த்தை வீரியத்தை கண்டறிந்துள்ளார்.

இதில் முப்பதுக்கு மேற்பட்ட விதங்களில் சுமார் 5,300 போட்டியாளர்களை வைத்து இந்த ஆய்வை மேற்க்கொண்டார். இதில் நாங்கள், நாம் என்ற அந்த வார்த்தையை அதிகமாக உபயோகிக்கும் தம்பதிகளிடத்தில் காலம் காலமாக காதல் நிலைத்திருக்கிறது. இது தம்பதிகளிடத்து மட்டுமின்றி வீட்டில் உள்ள சகோதரிகள், உறவுகளின் உறவுகள் இன்னும் உறுதியாகிறது.

நாம், நாங்கள் என்ற வார்த்தையின் மூலம் உறவுகளை சேர்த்து சொல்வதால் நம்மோடு அவர், அவர்கள் இருக்கின்றனர் என்பதால், தன்னம்பிக்கை கூடுகிறதாம். இதன் மூலம் ஒரு நிம்மதி, உறவில் பலம், மனதளவில் வலு பெருகின்றனர்.

கடைசியாக, நாம் என்று சொன்னால் உதடுகள் இணை போல் உறவுகளும் இணையவதற்கான அத்தனை சக்தியும் இருக்கிறது என்று இந்த ஆய்வின் முடிவில் நிரூப்பித்து விட்டனர். – Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply