தூக்கி ஏறியப்படும் பூசணி விதைகளில் இவ்வளவு அதிசய பலன்களா?

0


நாம் அன்றாட உட்கொள்ளும் காய்கறிகள் பல பயன்களை கொண்டுள்ளது. அதில் பூசணியும் ஒன்று. பூசணிகாயினை உட்கொண்டு விதைகளை தூக்கி ஏறியும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் அவ்வாறு தூக்கி ஏறியப்படும் பூசணி விதைகளில் இவ்வளவு அதிசயமா என்று அறிவியல் வியக்கிறது. அதன் பயன்களை நாமும் அறிந்துகொள்ளலாம்.


பூசணி விதையில் 30 சதவீதம் புரதசத்து அடங்கியுள்ளது. இந்த விதையில் உள்ள நல்ல கொழுப்பு முடிவளர்வதை ஊக்கப்படுத்துவதுடன், ஆரோக்கியமான சருமத்தையும் பெற்று தருகின்றன. ஆராய்ச்சியின்படி 100 கிராம் பூசணி விதையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளதாக தகவல் அறியப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஜிங்க் என்ற தாதுச்சத்து நிறைந்துள்ளது.


இதில் அடங்கியுள்ள ஆண்டி ஆப்சிடன் உடலை நோயில் இருந்து பாதுகாக்கும் அரணாக செயல்படுகின்றன. பூசணி விதையில் ரத்த அடர்த்தியை அதிகரிக்கும் ஹீமோகுளோபின் உள்ளதால், இது நமது உடலை ரத்த சோகையில் இருந்து பாதுகாக்கும்.


இதில் உள்ள டிரம்ப்டோபேன் என்ற அமினோ அமிலம் செரிமானத்தின் போது செரடோனின் என்ற ஹார்மோனாக மாற்றப்பட்டு ஆரோக்கியமான உறக்கத்தை அளிக்கிறது. மேலும் மெக்னீசியம் என்ற தாது சத்து நமது உடல்நலத்திற்கு உறுதுணையாக அமைக்கிறது. விதையில் உள்ள பைட்டோஸ்டிரால் உடல் வலிமையை அதிகரிக்க செய்ய வல்லமை வாய்ந்தது.


40 வயதிற்கு மேற்பட்டோருக்கு எலும்பு தேய்மானம் என்பது பரவலாக காணப்படுகிறது. பூசணி விதையில் அடங்கியுள்ள ஜிங்க், கால்சியம், காப்பர் இதர தாதுசத்துகள் எலும்பினை உறுதிப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஒமேகா அமிலம் என்ற நல்ல கொழுப்பு இதயத்தை வலுப்படுத்தி இருதய நோய்களிலிருந்து நம்மை பாதுக்காக்கின்றன.


நமது உடலில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக பூசணி விதை அமைந்துள்ளது. மேலும் அதிக அளவு உள்ள நார்சத்து உடல் பருமனை குறைக்கின்றன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன் பெண்களை மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்கின்றன. இவ்வளவு சத்துகள் நிறைந்துள்ள பூசணி விதைகளை தூக்கி எறியாமல் உலர்படுத்தி உப்பு மற்றும் மிளகு பொடியினை சேர்த்து மாலை நேர திண்பண்டமாக சாப்பிடலாம்.

Leave a Reply