ஒட்டு மொத்த உடலும் சுத்தமாக்க பாலுடன் இத ஒரு ஸ்பூன் கலந்து குடித்து பாருங்க..!

0

விளக்கெண்ணெயில் உள்ள மருத்துவ குணங்களை தற்போது உள்ள தலைமுறையினர் மறந்து விட்டனர்.

எண்ணெய்களில் விளக்கெண்ணெய் மிகவும் அடர்த்தியானது.

அதிலும் விளக்கெண்ணெயை ஒருவர் உட்கொள்வதன் மூலம், வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும். அதனோடு, வயிறு மட்டுமின்றி ஒட்டு மொத்த உடலும் சுத்தமாகும்.

வயிற்றில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகரித்தால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அடிவயிற்றில் வலியையும் ஏற்படுத்தும்.

ஆனால், விளக்கெண்ணெய் இயற்கை நிவாரணியாக செயல்பட்டு, வயிற்று பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுவிக்கும்.

அரை டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் இந்த பாலைக் குடித்தால், வயிறு முழுமையாக சுத்தமாகிவிடும்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்தல் மலசிக்கல் இருக்காது.

இரவு படுப்பதற்கு முன்பு, பாதங்களில் விளக்கெண்ணெயை தேய்த்து கொண்டு படுத்தால் உடலில் இருக்கும் சூடு பறந்து போய்விடும். – Source: seithipunal


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply