யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்.

0

யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி 1 இன்று (06.10.2022) காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழா 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் எட்டு அமர்வுகளாக இடம்பெறும்.

இதேவேளை, மேற்படி பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்படிப்பு தகைமை பெற்றவர்களுக்கும், 2046 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் சிரேஷ்ட சோ.பத்மநாதன், துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைத்துள்ளனர்

மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் துறைப்பீட பேராசியர்கள், விரிபுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply