இலங்கையில் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

0

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக பகீர் தகவலொன்றை வெளியாகியுள்ளது.

இதனை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயாளர்களாக இணங்கானப்படுகின்ற நிலையில் வயோதிபமும் மற்றும் மரபணுவும் அதற்கு காரணமாக அமைகிறது.

இலங்கையில் ஆண்களையும் தாக்கும் புற்றுநோயானது புகைத்தல் மதுபானம் அருந்துதல் கிருமி நாசினி பயன்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சியின்மை உறைப்பான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.

ஆண்களுக்கு புற்றுநோயானது வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் ஏற்படுவதுடன் பெண்களுக்கு பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படுகின்றது.

துமட்டுமல்லாது பெண்களுக்கு மாதவிடாய் நின்ற நிலையில் ஏற்படும் தொடர்ச்சியான இரத்தப்போக்கு புற்றுநோய் அறிகுறிகளாக கொள்ளப்படுகிறது.

மனித உடலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவது மிகவும் கடினமாக இருக்கின்ற நிலையில் நீண்ட நாள் இருமல் வாய்ப் புண், மலம் கழித்தலில் சீத மேற்படுதல், உடலின் வெளிப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் போன்றன புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் எனவும் கலாநிதி நடராஜா ஜெயக்குமார் கூறினார் .

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படும்போது வைத்தியரை அணுகினால் நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோயை அறிவதற்கான வசதிகள் வைத்தியசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply