சமையல் எரிவாயு விலையில் மாற்றம்.

0

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலையை கணக்கிடும் சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 246 ரூபாயினால் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, தற்போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் 4,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிவாயு விலை குறைந்துள்ள போதிலும், உணவகங்களில் உணவு விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply