தினமும் முகத்தில் இதை மூன்று சொட்டு தடவினால் போதும்.

0

தேவையான பொருட்கள்:-

சிறிய கற்றாழை மடல் – ஒன்று
டீ ட்ரி ஆயில் – மூன்று துளிகள்
ரோஸ் வட்டார – ஒரு ஸ்பூன்
காற்றுப்புகாத பாட்டில் – ஒன்று

ஒரு சிறிய கற்றாழை மடலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் உள்ள தோலினை நீக்கிவிட்டு ஜெல்லினை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த கற்றாழை ஜெல்லினை சுத்தமான நீரில் ஐந்து முறை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.

கற்றாழை பேஸ் கிரீம் செய்முறை

பிறகு காய்கறி நறுக்கும் கட்டிங் போர்டில் இந்த கற்றாழை ஜெல்லினை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். இவ்வாறு நறுக்கும்பொழுது கற்றாழை ஜெல்லானது ஒரு ஜெல் பதத்திற்கு வரும்.

பின் இதனை ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு அதனுடன் மூன்று சொட்டுகள் டீ ட்ரி ஆயில் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் இதனை ப்ரிட்ஜியில் வைத்து ஒரு வரம் வரை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:-

தினமும் இரவு தூங்குவதற்கு முன் நாம் தயாரித்த இந்த ஜெல்லினை மூன்று சொட்டுகள் எடுத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதினால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அதாவது கரும்புள்ளிகள், கரும்திட்டுகள், வறண்ட சருமம், ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் என அனைவரும் இந்த ஃபேஸ் கிரீமை தினமும் இரவு உறங்குவதற்கு முன் முகத்தில் அப்ளை செய்து மறுநாள் காலை குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

அதாவது சருமம் என்றும் இளமையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

Leave a Reply