ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு.

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவைமீறி மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் , கடந்த 3 ஆம் திகதி ஜோசப் ஸ்டாலின்கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதான அவரை நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர், கோட்டை நீததவான் நீதமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply