வழமைக்கு திரும்பும் ரயில்வே திணைக்களம்.

0

மலையக ரயில் சேவை நாளை (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கிடையில், இடம்பெற்ற மண்சரிவு , மற்றும் பாறைகள் விழுந்தமையினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததோடு சீரமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா கிரிமெட்டிய வீதி, மண் சரிவினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இங்கு ஒரு வழி பாதை போக்குவரத்தே இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply