அரச நிறுவனம் ஒன்று தொடர்பில் ஜனாதிபதி ரணில் எடுத்த நடவடிக்கை.

0

லேக் ஹவுஸ் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடத்தை ஹோட்டல் வளாகம் ஒன்றிற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வெகுஜன ஊடக அமைச்சினால் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சம்பளம் மற்றும் கடனை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை விற்பனை செய்து பெற்றுக் கொள்ளப்படும் பணத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தை கொழும்பில் வேறொரு இடத்தில் ஆரம்பிக்கவும் அல்லது அந்த நிறுவனத்தை கலைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பழமையான கட்டிடங்கள் சுற்றுலாவை துறையை மேம்படுத்த உதவுவதால், இங்கு ஹோட்டல் வளாகத்தை அமைப்பதே நோக்கம் என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி 90 வருட குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், குத்தகைக் காலமும் அடுத்த வருடத்துடன் நிறைவடையவுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தாத்தா டி.ஆர். விஜயவர்தன லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிறுவுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply