கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பு – லோட்டஸ் வீதியில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்லவதாக தகவல் தெரியவந்துள்ளது.
கொழும்பு – காலிமுகத்திடலில் பதிவாகிய சம்பவத்தை கண்டித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



