கோட்டா இலங்கையை விட்டு வெளியேறுகிறார் எனும் கொழும்புத் தகவல்!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் அரை மணி நேரத்தில் இலங்கையிலிருந்து வெளியேற ஹெலிகாப்டரில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவுள்ளதாகவும் அங்கிருந்து நாட்டைவிட்டு வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள , அவ் விமானம் விமானப்படைக்கு சொந்தமானதாகும். இலங்கை விமானப்படையிடம் 4 , AN 32 ரக விமானங்கள் உள்ளன, இந்த விமானங்கள் ஒரு நேரத்தில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச தூரம் 2500 கி.மீட்டராகும்.

அதேவேளை கட்டுநாயக்கவிற்கும் துபாய்க்கும் இடையிலான விமான தூரம். 3290கி.மீ. அதன்படி, கோட்டாபய முதலில் இலங்கையில் இருந்து அருகிலுள்ள நாட்டிற்கு தப்பிச் சென்று பின்னர் இறுதி இலக்குக்குச் செல்வார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கோட்டபாய தற்போது தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள்ளதாகவு சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. 

 

அதேவேளை கடந்த 9 ஆம் திகதி மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறைந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ள கோட்டாபய இன்று மீண்டும் கொழும்பிற்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் கோட்டாபய திருகோணமலையில் இருந்து கொழும்பிற்கு வருவதற்காக ஹெலிகப்டரில் ஏறும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேசமயம் கோட்டாபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய கடந்த அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் குடும்பத்துடனான ஹெலிகொப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்தில் வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது, ​​கோட்டாபய இரத்மலானை விமானப்படைத் தளத்தில் உள்ள நிலையில் , அவரைச் சந்திப்பதற்காக முப்படைத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் ஜனாதிபதி கோட்டாபய இரத்மலானையிலிருந்து எங்கு செல்வார் என்பது தொடர்பில் எவ்வித தகவல்கள்ம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply