முகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாழை பவுடர்.

0

முதலில் கற்றாழையின் ஒரு பகுதியை எடுத்து அதன் ஓர முட்பகுதிகளை நறுக்கிக்கொள்ளவும்.

அடுத்து இதனை பவுடர் செய்வதால் கற்றாழை மேல் உள்ள தோல் பகுதிகளை நீக்க வேண்டியதில்லை.

அடுத்ததாக கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கி பவுலில் போட்டுக்கொள்ளவும்.

கற்றாழை பவுடர் – விளக்கம் 2:
இப்போது பவுலில் நறுக்கி வைத்த கற்றாழையை அகலமான தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

நறுக்கிய கற்றாழையை வெயிலில் 4 நாட்களுக்கு நன்றாக காயவைக்க வேண்டும்.

கற்றாழை பவுடர் – விளக்கம் 3:
வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்த கற்றாழையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துவைத்து கொள்ளவும்.

அவ்ளோதாங்க முகத்தை பாதுகாக்கும் இயற்கையான கற்றாழை பவுடர் ரெடி.

இந்த கற்றாழை பவுடரை 1 வருடம் வரையிலும் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

சருமம் அழகாக வேண்டுமென்றால் இயற்கையான முறையில் கற்றாழை பவுடர் ரெடி செய்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

Leave a Reply