கோட்டா, ரணில், உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு.

0

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

2019 இல் வழங்கப்பட்ட சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான வரிச்சலுகைகளால் அரசாங்க வருவாய் குறைப்பு, சட்டவிரோதமான வரிச் சலுகையைத் திரும்பப் பெறத் தவறியமை உள்ளிட்ட விடயங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பீச் ரேட்டிங் குறைப்புகளுக்குப் பின்னர் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கத் தவறியமை ரூபாயின் மதிப்பை சரியான நேரத்தில், ஒழுங்கான மற்றும் பொருத்தமான முறையில் மதிப்பிழக்கச் செய்யாதமை உள்ளிட்ட விடயமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்க, சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயல்கள் அல்லது புறக்கணிப்புகளுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply