பாதுகாப்பு குறித்து காவற்துறையினர் விழிப்புணர்வு.

0

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் மறியலில் ஈடுபட்டு வருவதையொட்டி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று ரெயில் நிலையம் மற்றும் வெளிப்பகுதியில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ், பணியில் சேரும் இளைஞர்களிடம் ஒழுக்கம், தேசப்பற்று, ராணுவம் மீதான புரிதல் ஏற்படும்.

மேலும் 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.

மீதமுள்ளவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும் பணி நீட்டிப்பாகும் 25 சதவீத வீரர்களுக்குக் கூடுதலாகப் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.

அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பிற அரசு பலன்களையும் அடைவார்கள்.

இதில் மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது.

இதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால், தமிழ் நாட்டில் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுைழயாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து ரெயில் நிலையத்திலும், ரெயில் நிலையத்தின் வெளிப்பகுதியிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுத்து பேரணியாக சென்று ெரயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply