உங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்.

0

இதற்கு தேவையான பொருட்கள்:-

வாழைப்பழம் – ஒன்று
தயிர் – ஒரு ஸ்பூன்
பால் பவுடர் – ஒரு ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒருஸ்பூன்
ஒரு வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் பேஸ்டு போல் அரைத்து கொள்ளுங்கள்.

பின் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் அரைத்த வாழைப்பழம் பேஸ்ட் இரண்டு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், பால் பவுடர் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்தது கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் மாஸ்க் தயார், இதனை எப்படி சருமத்தில் அப்ளை செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள் பின் தயார் செய்து வைத்துள்ள இந்த வாழைப்பழம் ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும், சருமத்தில் உள்ள கருமைகள் அனைத்தும் அகன்று சருமம் மென்மையாக காணப்படும். மேலும் தொடர்ந்து இந்த டிப்ஸினை பாலோ செய்து வருவதினால் முகம் வெள்ளையாக காணப்படும்

Leave a Reply