சிவப்பழகை பெற குளியல் பொடி செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள் –
ஆவாரம் பூ – 150 கிராம் (காய வைத்தது)
செம்பருத்தி பூ – 15 (காய வைத்தது)
மரிக்கொழுந்து – 100 கிராம் (காய வைத்தது)
பன்னீர் ரோஜா – 1/2 கிலோ
எலுமிச்சை தோல் – 150 கிராம் (காய வைத்தது)
வெட்டி வேர் – 100 கிராம் (காய வைத்தது)
கோரை கிழங்கு – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
மகிழம் பூ – 100 கிராம் (காய வைத்தது)
பாசிப்பயறு – கால் கிலோ
பூலான் கிழங்கு – 100 கிராம்
கார்போக அரிசி – 100 கிராம்

ஆவாரம் பூ 150 கிராம், செம்பருத்தி பூ 15, மரிக்கொழுந்து 100 கிராம், பன்னீர் ரோஜா 1/2 கிலோ, எலுமிச்சை தோல் 150 கிராம், வெட்டி வேர் 100 கிராம், மகிழம் பூ 100 கிராம் இவற்றை தண்ணீரில் அலசி கொள்ளவும். பின் ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்து கொள்ளவும்.

கோரை கிழங்கு 50 கிராம், வசம்பு 50 கிராம், பாசிப்பயறு கால் கிலோ, பூலான் கிழங்கு 100 கிராம், கார்போக அரிசி 100 கிராம் இவற்றையும் காயவைத்து கொள்ளவும்.

காய்ந்த பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இதை பெண்கள் மட்டும் உபயோகபடுத்தினால் மஞ்சள் சேர்த்து கொள்ளலாம், ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்க்க வேண்டாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த பொடியை நீங்கள் ரோஸ் வாட்டர் அல்லது தயிர் அல்லது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். அரைமணி நேரம் கழித்து இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

சோப் போட்டு குளித்த பின் இந்த குளியல் பொடியை போட்டு குளிக்கலாம், அல்லது சோப்பு சேர்க்காமலும் இந்த பொடியை வைத்து மட்டும் குளிக்கலாம்.

Leave a Reply