மேலும் ஒரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவின் கடனுதவியின் கீழ் இந்த எரிபொருள் இலங்கைக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



