அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

0

நாட்டில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுயுள்ளது.

இந்நிலையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.

இதன் பிரகாரம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் 5 லட்சம் ரூபாவரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனம் ஊடாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக 5 லட்சம் ரூபா முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply