முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்ய வேண்டும்.

0

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என நீதிமன்றில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டினை சட்டத்தரணி சானகபெரேரா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான சதியில் ஈடுபட்டமை, மற்றும் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகையின் முன்னால் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு உதவியமை தொடர்பிலேயே மஹிந்த உள்ளிட்டவர்களை கைது செய்யவேண்டும் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply