நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய விசேட குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் குறித்த கூட்டத்தில் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றை விட கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



