நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் விநியோகத்திற்கு போதுமான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் இருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய தற்போது விநியோகத்துக்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் இரவு எரிவாயு கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



