மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம்.

0

நாட்டில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளது.

இதன்பிரகாரம் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply