கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்கள் சிறுவர்களுக்கு அதிகமாகக் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆகவே பெற்றோர்கள் அனைவரும் சிறுவர்கள் தொடர்பில் அதிதீவிர கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



