ஆனந்தம் அருளும் திருதியை திதி: விரதம் இருக்கும் முறை.

0

திதிகள் பதினைந்தில், திருதியை திதி முக்கியமான ஒன்று. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதியே, திருதியை. இந்த திருதியை திதியானது, சித்திரை மாதத்தில் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஏனெனில் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியை, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கிறோம்.

‘சயம்’ என்றால் ‘தேய்தல்’ என்று பொருள். ‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள் கொள்ளலாம்.

அதனால்தான் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை, ‘அட்சய திருதியை’ என்று பெயர் பெற்றது.

துரியோதனனின் சூழ்ச்சியால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டானது.

வனத்தில் இருந்தபோது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் ஒரு ஏற்பாட்டைச் செய்தார்.

அதன்படி பாண்டவர்களுக்கு, சூரிய தேவனால் அட்சய பாத்திரம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த பாத்திரத்தில் இருந்து அவர்கள் விருப்பப்பட்ட உணவை, அள்ள அள்ள குறையாத வகையில் பெற்று அவர்கள் உண்டு வந்தனர்.

இந்த அட்சய பாத்திரம், பாண்டவர்களுக்கு ஒரு அட்சய திருதியை நாளில்தான் கிடைத்ததாம்.

சாபம் காரணமாக பிட்சாடனராக உருமாறிய சிவபெருமான், தன் கையில் ஒட்டிக்கொண்டிருந்த கபாலம் (பிரம்மனின் தலை ஓடு), நிரம்பும் அளவுக்கு, காசியில் அன்னபூரணியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதுவும் அட்சய திருதியை நாளில்தான்.

Leave a Reply