வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

0

முதலில் மூன்று கற்றாழையை எடுத்து கொள்ளுங்கள் பின் கற்றாழையின் ஓரத்தில் சிறிதளவு கட் செய்து 3 மூன்று மணி நேரம் அப்படியே ஒரு தட்டில் வைத்திருக்கவும்.

இவ்வாறு வைத்திருப்பணினால் கற்றாழையில் இருந்து ஒருவிதமாக மஞ்சள் நிறத்தில் திரவம் வரும் அந்த திரவம் முழுமையாக வெளியே வைத்த பிறகு கற்றாழையை நன்றாக தண்ணீரில் கழிவு கொள்ளுங்கள்.

சுத்தமாக கழுவிய கற்றாழையை தோல் சீவி அவற்றில் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து கொள்ளவும்.

பின் அவற்றில் வைட்டமின் இ கேப்ஸுல் மாத்திரையில் இருக்கும் லிக்குடை உடைத்து ஊற்றி விடுங்கள்.

இப்பொழுது கற்றாழையை ஜெல்லை நன்றாக காலத்து ஒரு சுத்தமான பௌலில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் கற்றாழை ஜெல் தயார்.

நாம் தயார் செய்த இந்த கற்றாழை ஜெல்லை அப்படியே முகத்தில், கேசத்தின் வேர்ப்பகுதியில் பயன்படுத்தலாம்.

அல்லது இதனுடன் முல்தானி மெட்டி, கடலை மாவு போன்றவற்றை சேர்த்தும் பயன்படுத்தலாம்.

இந்த ஜெல்லை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை பயன்படுத்த முடியும்.

Leave a Reply