தலையில் அரிப்பு குறைய..!!

0

தேவையான பொருட்கள்:

வேப்பிலை – 1 கப்
எலுமிச்சை சாறு – 4 டீஸ்பூன்
இஞ்சி – 1 சிறிய துண்டு
தண்ணீர் – 1/2 கப்

தலை முடியில் அரிப்பு நீங்குவதற்கு முதலில் 1 கப் அளவிற்கு வேப்பிலையை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். 1 கப் அளவான வேப்பிலையை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் 1 கப் வேப்பிலை சேர்த்த பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு 4 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்ததாக மிக்ஸி ஜாரில் எலுமிச்சை சாறு சேர்த்த பின்பு இஞ்சியின் சிறு துண்டினை சேர்க்க வேண்டும். இஞ்சியுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஜாரில் உள்ளவற்றை நன்றாக அரைத்த பிறகு வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு காட்டன் துணியால் நனைத்து தலை முடியின் வேர்களில் படும் அளவிற்கு அப்ளை செய்ய வேண்டும்.

வேர் பகுதிகளில் அப்ளை செய்து 2 மணிநேரம் வரை வைத்திருக்க வேண்டும். 2 மணி நேரம் பின்னர் வாஷ் செய்துக்கொள்ளலாம். தலை முடி அரிப்பு உள்ளவர்கள் இந்த டிப்ஸை வாரத்தில் 1 முறை செய்து வந்தால் போதும். அரிப்பு, பொடுகு தொல்லை முற்றுலும் நீங்கிவிடும்.

Leave a Reply