முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்.

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அத்துடன் சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் மீண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply