நாட்டில் தற்போது எழுதுபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் அரச சேவையின் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச மாகாண தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளாந்தம் அதிகரித்து வரும் இந்த பொருட்களின் விலை அதிகரிப்பால் நிறுவன மட்டத்தில் இதனை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் அரச சேவை பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் சங்கத்தின் செயலாளர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தொலைநகல் இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் உறைகள், நகல், காகிதச் சுருள்கள், கோப்பு அட்டைகள், விடுமுறை விண்ணப்பங்கள், வவுச்சர்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பில் புத்தகங்களில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .



