இன்று வளர்பிறை பஞ்சமி திதி. பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்ல வாராஹி அம்மனுக்கு இந்த 1 பொருளை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யுங்கள்.

0

உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மன் திருவுருவ படம் இருந்தால் அந்த படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

திருவுருவப்படம் இல்லாதவர்கள் ஒரே ஒரு கிழங்கு மஞ்சளை எடுத்து அந்தக் கிழங்கு மஞ்சளை அம்மனாக நினைத்து கொள்ள வேண்டும்.

கிழங்கு மஞ்சள் மேல் ஒரு குங்கும பொட்டை வைத்துவிட்டு, அதை ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

(குண்டு மஞ்சள் என்று சொல்வார்கள் அல்லவா அந்த மஞ்சள். குண்டு மஞ்சளுக்கு, தடிமனாக இருக்கும் பக்கத்தில் பொட்டுவைத்து மஞ்சளை நிற்க வைத்தால் அப்படியே அம்மனின் உருவம் தெரியும்.) கைப்பிடி அளவு பச்சரிசி போட்டு அதன் மேலே இந்த மஞ்சளை வாராகி அம்மனாக நினைத்து அமர வைத்து விடுங்கள்.

வாராஹி அம்மனுக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் ‘மாதுளம் பழங்களை’ பிரசாதமாக வைக்க வேண்டும்.

செல்வ வளங்களை அள்ளி கொடுக்கக் கூடிய சக்தி இந்த மாதுளம் பழத்திற்கு உண்டு. அம்பாளின் மனதைக் குளிரச் செய்து செல்வ வளத்தைப் பெற இந்தப் பிரசாதம் மிகமிக முக்கியம்.

இந்த ஒரு பொருளை வழிபாட்டில் கட்டாயமாக வையுங்கள். உள்ளே இருக்கும் முத்துக்களை உதிர்த்துக் கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின்பு வராகி அம்மனுக்கு பிடித்த ஏதாவது ஒரு நெய்வேதியம்.

கிழங்கு வகைகள் வைக்கலாம். கிழங்கு கிடைக்கவில்லை என்றால் ஒரு டம்ளர் பானகம் நைவேத்தியமாக வையுங்கள்.

இரண்டு மண் அகல் விளக்குகளில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு வாராஹி அம்மனை நினைத்து மனதார பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வாராஹி அம்மனுக்கு முன்பு அமர்ந்து உங்களுக்கு தெரிந்த வாராகி அம்மன் மந்திரத்தை உச்சரிக்கலாம்.

இணையதளங்களில் நிறைய மந்திரங்கள் உள்ளது.

மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் மந்திரத்தை ஒலிக்கச் செய்து கேட்கலாம்.

அப்படி இல்லை என்றால் ‘ஓம் வாராஹி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை மனதார உச்சரித்து விட்டு தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

(பூஜைக்குப் பயன்படுத்திய மஞ்சளை எடுத்து முகத்தில் பூசிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.) அதன்பின்பு பிரசாதமாக வைத்த மாதுளம் பழத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். உங்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களுக்கு கொடுக்கலாம்.

இவ்வாறாக வாராஹி அம்மனை சுலபமான முறையில் இன்று மாலை 6.30 மணிக்கு மேலாக வழிபாடு செய்தாலே உங்களுக்கு வேண்டிய வரங்களை அந்த தாய் அள்ளி வழங்கி விடுவாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply