இலங்கை முழுவதும் பல பிரதேசங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஜனாதிபதி பதவி விலகும் வரை தங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.



