ஹங்கேரியில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதன் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில் பெரும்பாண்மையுடன் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பனின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.
இதனால், 4வது முறையாக விக்டர் ஆர்பன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் ஹங்கேரியின் வெற்றிக்காக விக்டர் ஆர்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் விக்டர் ஆர்பன், ஹங்கேரியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
இந்தியா- ஹங்கேரி இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்..



