அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்பிரகாம் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெருமளவு காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இராணுவ வாகனம் ஒன்று கொழுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டை சுற்றிவளைத்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அமைச்சர் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சளின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



