பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.

0

பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதற்கமைய குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அத்துடன் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

மேலும் கொரோனா காலகட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டது.

இதன்பிரகாரம் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

ஆகவே மாணவர்கள் பயமோ, தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் தேர்வு எழுத பிரதமரே முன்வந்து ஊக்கமளிப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply